ரிப்கான் பதியுதீனுக்கு பிணை – நீதிமன்றம் அனுமதி

ரிப்கான் பதியுதீனுக்கு பிணை – நீதிமன்றம் அனுமதி

ரிப்கான் பதியுதீனுக்கு பிணை – நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Fazlullah Mubarak

17 Feb, 2020 | 12:12 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சந்தேகநபரை 25,000 ரூபா ரொக்கப்பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தலா 2 சரீரப்பிணைகளிலும் விடுவிப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

பிணையாளர் ஒருவர் நெருங்கிய உறவினராக இருத்தல் வேண்டும் என உத்தரவிட்ட பிரதம நீதவான், சந்தேகநபருக்கு வௌிநாடு செல்வதற்குத் தடை விதித்துள்ளார்.

வாரந்தம் ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் எனவும் சந்தேகநபருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிணை வழங்கப்பட்டதை அடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போலி உறுதிப்பத்திரத்தைத் தயாரித்து தலைமன்னார் பகுதியில் இரண்டு காணிகளை விற்பனை செய்த மோசடியில் ரிப்கான் பதியுதீன் கைது செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்