கெமரூன் தாக்குதலில் சிறார்கள் உட்பட 22 பேர் உயிரிழப்பு

கெமரூன் தாக்குதலில் சிறார்கள் உட்பட 22 பேர் உயிரிழப்பு

கெமரூன் தாக்குதலில் சிறார்கள் உட்பட 22 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Feb, 2020 | 3:00 pm

Colombo (News 1st) மத்திய ஆபிரிக்க நாடான கெமரூனின் வட மேற்குப் பிராந்தியத்திலுள்ள கிராமமொன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

டும்போ (Ntumbo) கிராமத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அதிக குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் சிலர் உயிருடன் எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

எதிர்க்கட்சிகள் கெமரூன் இராணுவம் மீது குற்றஞ்சுமத்தியுள்ள நிலையில், குறித்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்பேற்கவில்லை.

பிரிவினைவாதிகளுடன் கடந்த 3 வருடங்களாக மோதலில் ஈடுபட்டு வரும் கெமரூன் அரசாங்கம் தாக்குதல் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்