by Fazlullah Mubarak 17-02-2020 | 1:27 PM
மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து நாளை மற்றும் நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இது தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில சமர்ப்பிக்கவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 20 ஆம் திகதி ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது.
இது தவிர குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .