மஹிந்த – மைத்திரியின் சந்திப்பு நாளை மறுதினம்

மஹிந்த – மைத்திரியின் சந்திப்பு நாளை மறுதினம்

மஹிந்த – மைத்திரியின் சந்திப்பு நாளை மறுதினம்

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2020 | 7:41 am

Colombo (News 1st) பொதுத் தேர்தலில் போட்டியிடும் புதிய கூட்டணி தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கும் இடையில் எதிர்வரும் 18ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதன்போது கூட்டணி தொடர்பில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர், பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணை இந்த மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்