நாம் இணைவதை இந்தியா விரும்பவில்லை  – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாம் இணைவதை இந்தியா விரும்பவில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாம் இணைவதை இந்தியா விரும்பவில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

எழுத்தாளர் Fazlullah Mubarak

16 Feb, 2020 | 9:55 pm

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் தமது கட்சி இணைவதை இந்தியா விரும்பவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகின்றார்.

இந்த விடயம் எழுத்துமூலம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பருத்தித்துறையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கூட்டு என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை இலங்கையில் இருந்தபோது அதற்கு ஒரு ஒட்டுக்குழுவாக இருந்த E.P.R.L.F. அணியின் ஒரு உறுப்பினராகத் தான் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார் எனவும் கூறியுள்ளார்.

இந்த முயற்சிகள் அனைத்துமே, வேறு தரப்பின் நலன்களை கருத்திற்கொண்டு இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய அவர் இது மக்களின் நலன்களுக்காக அல்ல என்றும் தெரிவித்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு வரக்கூடிய வாக்கு வங்கியை உடைக்க மக்களைக் குழப்பும் நோக்கத்துடன் அவர்கள் செயற்படுகின்றார்கள் என்று மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்