எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் கைது

எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் கைது

எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

16 Feb, 2020 | 1:27 pm

Colombo (News 1st) கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் 3 படகுகளும் கடற்படையினரால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும் இன்று பொறுப்பேற்கவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் – புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்களே கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்