ஐரோப்பாவிற்கும் பரவிய கொரோனா வைரஸ்

ஐரோப்பாவிற்கும் பரவிய கொரோனா வைரஸ்: பிரான்ஸில் ஒருவர் பலி

by Bella Dalima 15-02-2020 | 5:13 PM
Colombo (News 1st) ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. பிரான்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 80 வயதான சீன சுற்றுலாப் பயணி ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார். இத்தகவலை பிரான்ஸின் சுகாதார அமைச்சர் Agnes Buzyn உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த வயோதிபப் பெண் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தனக்கு அறியக் கிடைத்ததென சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளாவிய ரீதியில் 63,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1500-இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த வைரஸ் தாக்கம் 24 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவில் பரவிய இந்நோய் வேறு நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், சீனாவிற்கு வௌியில் இதற்கு முன்னதாக பிலிப்பைன்ஸ், ஹாங்காங் மற்றும் ஜப்பானில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், ஆசியக் கண்டத்திற்கு வௌியில் ஐரோப்பாவில் தற்போது முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.