இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஐ.நா உறுப்பு நாடுகள் சந்திப்பில் சுமந்திரன் வலியுறுத்தல்

by Staff Writer 15-02-2020 | 8:03 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கூட்டத்தொடருக்கு முன்னர் ஜெனிவாவில் நேற்று (14) நடைபெற்ற உறுப்பு நாடுகளுடனான சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பில் அவர் ஜெனிவாவிலிருந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இதன்போது, இலங்கை தீர்மானத்தில் இணங்கிய விடயங்கள் அனைத்தையும் செய்து முடிக்கும் வரை மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என தாம் கோரியதாகக் குறிப்பிட்டார். அதுவே பாதிக்கப்பட்ட தரப்பினுடைய எதிர்பார்ப்பு என திட்டவட்டமாக தாம் கூறியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.