வறட்சியினால் 54,000 குடும்பங்கள் பாதிப்பு

வறட்சியினால் 54,000 குடும்பங்கள் பாதிப்பு

வறட்சியினால் 54,000 குடும்பங்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2020 | 3:21 pm

Colombo (News 1st)  மூன்று மாகாணங்களில் நிலவும் வறட்சியினால் , 54,016 குடும்பங்களைச் சேர்ந்த 2,03023 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலவும் வறட்சியினால் சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, புலத்கொஹூபிட்டிய , தெரணியகல மற்றும் கலிகமுவ பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட 583 குடும்பங்களைச் சேர்ந்த 2458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொடை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 1921 குடும்பங்களைச் சேர்ந்த 7959 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் அக்குரண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நிலவும் வறட்சியினால் 1213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களுகங்கையுடன் கலக்கும் களப்பு நீரால் களுத்துறை, பேருவளை, பாணந்துறை மற்றும் தொடங்கொட பிரதேச செயலகங்களுக்குட்பட்ட 2,18,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்