ஜனாதிபதியினால் தேசிய சம்பள ஆணைக்குழு ஸ்தாபிப்பு

ஜனாதிபதியினால் தேசிய சம்பள ஆணைக்குழு ஸ்தாபிப்பு

ஜனாதிபதியினால் தேசிய சம்பள ஆணைக்குழு ஸ்தாபிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2020 | 4:12 pm

Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் தேசிய சம்பள ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தேசிய சம்பளக் கொள்கையொன்றை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

புதிய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டமையால், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி அவ்வப்போது திருத்தங்களுக்குட்பட்டு வந்த தேசிய சம்பளங்கள் மற்றும் ஆளணி ஆணைக்குழு இரத்து செய்யப்படுவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆணைக்குழுவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

உபாலி விஜேவீரவின் தலைமையிலான இவ்வாணைக்குழு 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மக்கள் நேய அரச சேவையை கட்டியெழுப்புவதற்காக நீண்டகால திட்டமொன்று தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்