ஆனமாலு ரங்க கொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது

ஆனமாலு ரங்க கொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது

ஆனமாலு ரங்க கொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

15 Feb, 2020 | 4:42 pm

Colombo (News 1st) கொழும்பு – மாதம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற ஆனமாலு ரங்க உள்ளிட்ட இருவரின் கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை புதுக்கடை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 39 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி மாதம்பிட்டி மயானத்திற்கு அருகில் கூரான ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைய, நேற்று மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்