மாங்குளத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 20 வருடங்கள் பழமையானவை

மாங்குளத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 20 வருடங்கள் பழமையானவை

மாங்குளத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 20 வருடங்கள் பழமையானவை

எழுத்தாளர் Staff Writer

14 Feb, 2020 | 4:04 pm

Colombo (News 1st) முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 20 வருடங்கள் பழமையானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சட்ட வைத்திய நிபுணரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புனர்வாழ்வு பிரிவிற்கான கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ள இடத்தில் கடந்த 12 ஆம் திகதி எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன் பின்னர் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, நீதிமன்றத்தின் அனுமதியுடன் நேற்று அங்கு அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிளிநொச்சி சட்டவைத்திய அதிகாரி, தடயவியல் அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் இந்த அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அகழ்வின் போது எலும்புகளும், துணிகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்