திருகோணமலையில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது

திருகோணமலையில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது

திருகோணமலையில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Feb, 2020 | 4:21 pm

Colombo (News 1st) திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் இரவு நேரங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களால் பயன்படுத்தப்பட்ட காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களால் வீடுகளில் திருடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேநபர்களின் காரிலிருந்து கைக்குண்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபரால் திட்டமிடப்பட்டு, நாடளாவிய ரீதியில் திருட்டுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்