சீனாவில் இருந்து அழைத்துவரப்பட்ட இலங்கை மாணவர்கள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு

சீனாவில் இருந்து அழைத்துவரப்பட்ட இலங்கை மாணவர்கள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு

சீனாவில் இருந்து அழைத்துவரப்பட்ட இலங்கை மாணவர்கள் கொழும்பிற்கு அனுப்பி வைப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Feb, 2020 | 3:29 pm

Colombo (News 1st) சீனாவின் வுஹான் நகரிலிருந்து நாட்டை வந்தடைந்த பின்னர் தியத்தலாவை இராணுவ முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை மாணவர்களை கொழும்பிற்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர டி சில்வாவை இவர்கள் சந்திக்கவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

வுஹான் நகருக்கு சென்ற ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் கடந்த முதலாம் திகதி இலங்கையை சேர்ந்த 33 பேர் அழைத்துவரப்பட்டனர்.

அன்றிலிருந்து இன்று வரை இவர்கள் அனைவரும் விசேட மருத்துவக் கண்காணிப்பின் கீழ் தியத்தலாவை இராணுவ ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அங்கொடை தேசிய நோய் தொற்றியல் பிரிவில் சிகிச்சை பெற்ற சீன நாட்டு பெண்ணை வைத்தியசாலையிலிருந்து வௌியேற்றுவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என தொற்று நோய் விசேட நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்