by Staff Writer 14-02-2020 | 5:29 PM
Colombo (News 1st) இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய மீன் சந்தை இன்று திறந்து வைக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மீன் வகைகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கொழும்பு முகத்துவாரத்தில் புதிய மீன் சந்தை திறந்து வைக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.
இத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.