கட்டணமின்றி விசா வழங்கும் நடைமுறை நீடிப்பு

48 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமின்றி விசா வழங்கும் நடைமுறை நீடிப்பு

by Staff Writer 13-02-2020 | 4:22 PM
Colombo (News 1st) 48 நாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணமின்றி விசா வழங்கும் நடைமுறையை மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையை 6 மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும், ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் கால எல்லையை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.