வானொலி அரச விருது வழங்கல் விழாவில் விருதுகளைக் குவித்த சக்தி FM

by Staff Writer 13-02-2020 | 10:24 PM
Colombo (News 1st) வானொலி அரச விருது வழங்கல் விழாவில் சிறந்த நாடக நடிகருக்கான விருது 'இராவணன் ஆகிய நான்' நாடகத்தில் நடித்த சக்தி FM-இன் ஞானகுமாரன் கனாதீபன் வசமானது. சிறந்த நாடக தயாரிப்பிற்கான விருது சக்தி FM-இன் C.K.மயூரன் வசமானது. போராளிகள் நாடக தயாரிப்பிற்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. வானொலி அரச விருது வழங்கல் விழாவில் சிறந்த ஒலியமைப்பிற்கான விருது சக்தி FM-இன் அருள்ராஜ் ஹனி நயகரா வசமானது. சிறந்த இசை நிகழ்ச்சிக்கான விருதை சக்தி FM-இன் சி.பிரேம்காந்த் தனதாக்கிக்கொண்டார்.