மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின்போது எலும்புகள், ஆடைகள், தோட்டாக்கள் மீட்பு

by Staff Writer 13-02-2020 | 8:07 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக புனர்வாழ்வு பிரிவிற்கான கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ள இடத்தில் நேற்று (12) எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் குறித்த இடத்தில் இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் பெக்கோ இயந்திரத்தின் மூலம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அகழ்வின்போது எலும்புக்கூட்டின் எச்சங்களும் ஆடைகள் சிலவும் துப்பாக்கித் தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் கிளிநொச்சி சட்டவைத்திய அதிகாரியால் பரிசோதனைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.