பகிடிவதையால் சிதையும் உயர் கல்விக் கனவு

by Staff Writer 13-02-2020 | 8:25 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் பல கனவுகளோடு உயர்கல்விக்காக பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகின்றனர். எனினும், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளால் அந்தக் கனவுகள் தளர்த்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை இடைநடுவில் கைவிடுகின்றனர். அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் என்பன அதற்கு சிறந்த உதாரணங்களாகும். இந்தப் பின்புலத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை என்ற போர்வையிலான பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் சமூகத்தில் அதிகளவில் விமர்சிக்கப்பட்டது. நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக ஏற்பட்ட உடல், உள ரீதியிலான வடுக்களிலிருந்து முழுமையாக விடுபடாத ஒரு சமூகத்தால் பகிடிவதை என்ற போர்வையில் இடம்பெறுகின்ற செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.