பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய தௌிவில்லை

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய தௌிவில்லை: சுனில் ஹந்துன்நெத்தி

by Bella Dalima 13-02-2020 | 3:57 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதுமான தௌிவில்லை என கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். 5 அறிக்கைகளும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டுள்ளதால், அதனை முழுமையாக ஆராயாது விவாதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. எனவே, விவாதத்திற்கு முன்னர் இந்த அறிக்கை தொடர்பில் முழுமையான புரிதலை பெற்றுக்கொள்வது இலகுவான விடயமாக அமையாது எனவும் சுனில் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார். இதன் காரணமாக இந்த அறிக்கைகள் தொடர்பில் கோப் குழுவில் கலந்துரையாடி, சுருக்கமான அறிக்கை ஒன்றை தயாரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.