வானொலி அரச விருது வழங்கல் விழாவில் விருதுகளைக் குவித்த சக்தி FM

வானொலி அரச விருது வழங்கல் விழாவில் விருதுகளைக் குவித்த சக்தி FM

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2020 | 10:24 pm

Colombo (News 1st) வானொலி அரச விருது வழங்கல் விழாவில் சிறந்த நாடக நடிகருக்கான விருது ‘இராவணன் ஆகிய நான்’ நாடகத்தில் நடித்த சக்தி FM-இன் ஞானகுமாரன் கனாதீபன் வசமானது.

சிறந்த நாடக தயாரிப்பிற்கான விருது சக்தி FM-இன் C.K.மயூரன் வசமானது. போராளிகள் நாடக தயாரிப்பிற்கே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

வானொலி அரச விருது வழங்கல் விழாவில் சிறந்த ஒலியமைப்பிற்கான விருது சக்தி FM-இன் அருள்ராஜ் ஹனி நயகரா வசமானது.

சிறந்த இசை நிகழ்ச்சிக்கான விருதை சக்தி FM-இன் சி.பிரேம்காந்த் தனதாக்கிக்கொண்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்