பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொஹமட் ஹபீஸ் பந்துவீச விதிக்கப்பட்ட த​டை நீக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொஹமட் ஹபீஸ் பந்துவீச விதிக்கப்பட்ட த​டை நீக்கம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மொஹமட் ஹபீஸ் பந்துவீச விதிக்கப்பட்ட த​டை நீக்கம்

எழுத்தாளர் Bella Dalima

13 Feb, 2020 | 7:32 pm

Colombo (News 1st) பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான மொஹமட் ஹபீஸ் மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்துவீசும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

பந்துவீச அவருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

மொஹமட் ஹபீஸ் பந்தை வீசி எறிகிறார் எனும் சந்தேகத்தை கடந்த வருடத்தில் நடுவர்கள் வெளிப்படுத்தினர்.

அவர் பந்துவீசும் போது மணிக்கட்டு 15 பாகைக்கு மேல் வளைவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

எவ்வாறாயினும், இது தொடர்பாக இங்கிலாந்தின் லோபோரோ பல்கலைக்கழகம் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், இதன்போது ஹபீஸின் பந்துவீச்சு பாணியில் தவறில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மொஹமட் ஹபீஸ் பந்துவீச விதிக்கப்பட்ட த​டையை நீக்குவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

கடந்த 6 வருடங்களில் பல தடவைகள் மொஹமட் ஹபீஸின் பந்துவீச்சு பாணி குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்