எஸ்.பி. திசாநாயக்கவைக் கண்டித்து அபிவிருத்திக்குழு கூட்டத்திலிருந்து தொழிலாளர் காங்கிரஸ் வெளிநடப்பு

எஸ்.பி. திசாநாயக்கவைக் கண்டித்து அபிவிருத்திக்குழு கூட்டத்திலிருந்து தொழிலாளர் காங்கிரஸ் வெளிநடப்பு

எஸ்.பி. திசாநாயக்கவைக் கண்டித்து அபிவிருத்திக்குழு கூட்டத்திலிருந்து தொழிலாளர் காங்கிரஸ் வெளிநடப்பு

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2020 | 8:41 pm

Colombo (News 1st) நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து வௌிநடப்புச் செய்தனர்.

காணிப் பிரச்சினையொன்றை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட விவாதமே இதற்குக் காரணமாகும்.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் முத்து சிவலிங்கம், அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவிற்கு இடையிலான விவாதத்தின் போது, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜன் தலையீடு செய்ததை அடுத்து, அமைச்சர் அதற்கு எதிர்ப்புத் தெரித்துள்ளார்.

இதனாலேயே அமைதியின்மை ஏற்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்