ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கான குறுந்தகவல் சேவைக்கு அமைச்சரவை அனுமதி

ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கான குறுந்தகவல் சேவைக்கு அமைச்சரவை அனுமதி

ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கான குறுந்தகவல் சேவைக்கு அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2020 | 6:20 pm

Colombo (News 1st) ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு தங்களிடமிருந்து மாதாந்தம் அறவிடப்படும் பணத்தை கணக்கிலிடுவது தொடர்பான தரவுகளை குறுந்தகவல் ஊடாக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தில் 2.6 மில்லியன் நிரந்தர உறுப்பினர்கள் உள்ளதாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது காணப்படும் நடைமுறைக்கு அமைய, உறுப்பினர்கள் 6 மாதம் அல்லது 12 மாதங்களின் பின்னரே தமது கணக்கு அறிக்கையை பெற்றுக்கொள்கின்றனர்.

புதிய முறையினூடாக ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினரின் கையடக்கத் தொலைபேசிக்கு மாதாந்தம் அறவிடப்படும் பணம் தொடர்பில் உடனடியாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்