இந்திய தேசிய காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்?

இந்திய தேசிய காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்?

இந்திய தேசிய காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்?

எழுத்தாளர் Staff Writer

13 Feb, 2020 | 10:48 am

Colombo (News 1st) இந்திய தேசிய காங்கிரஸின் தலைமைத்துவத்தைத் தீர்மானிக்கும் இறுதி முடிவு ஏப்ரல் மாதம் எட்டப்படவுள்ளது.

கட்சியின் தலைவராக, இடைக்காலத் தலைவராகவுள்ள சோனியா காந்தியையே அறிவிப்பதா அன்றி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதா என்பது தொடர்பில், கட்சியின் முழுமையான அமர்வில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இந்த அமர்வை ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்கு முன்னர் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை ராகுல் காந்தி இம்முறை ஏற்றுக்கொள்வாரா என்பது தௌிவின்றியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், தலைமைப்பதவியை மீளப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ராகுல் காந்தியிடமிருந்து எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லையென அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், சோனியா காந்தியின் உடல்நலக்குறைவு காரணமாக புதிய சுறுசுறுப்பான தலைவரொருவரைத் தெரிவு செய்ய வேண்டுமென்ற வலியுறுத்தல் வௌியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்