by Staff Writer 13-02-2020 | 4:26 PM
Colombo (News 1st) ஹட்டன் - சிங்கமலை வனப்பகுதியில் பரவியுள்ள தீயைக் கட்டுப்படுத்த விமானப்படையின் பெல்-212 ரக ஹெலிகொப்டர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - இரத்மலானையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகொப்டரினூடாக தீயணைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
சிங்கமலை வனப்பகுதியில் இன்று முற்பகல் தீ பரவியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
எவரேனும் குறித்த வனப்பகுதிக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.
சிங்கமலை வனப்பகுதியில் அரிய வகை உயிரினங்களும் தாவரங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக குறித்த வனப்பகுதிக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தீ வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.