முப்படையினருக்கான பொது மன்னிப்பு காலம் நிறைவு

முப்படையினருக்கான பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு

by Staff Writer 12-02-2020 | 11:50 AM
Colombo (News 1st) சேவையிலிருந்து விலகிச்சென்ற முப்படையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் இன்றுடன் (12) நிறைவடைகின்றது. அதற்கமைய, சேவையிலிருந்து விலகியவர்கள் மீண்டும் சேவையில் இணைந்துகொள்வதற்கு இன்று நள்ளிரவு வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதிக்கான அதிகாரங்களுக்கு அமைய கடந்த 5ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரையான காலப்பகுதி பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டது. பொது மன்னிப்பு காலப்பகுதியில முப்படையை சேர்ந்த 6,259 பேர் சேவைக்கு மீள அறிக்கையிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் உயரதிகாரிகள் 13 பேரும் மீள சேவைக்கு சமூகமளித்துள்ளதுள்ளனர். இந்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தை சேர்ந்த உயரதிகாரிகள் 6 பேரும் 4,528 உறுப்பினர்களும் மீண்டும் சேவைக்கு அறிக்கையிட்டுள்ளனர். கடற்படையை சேர்ந்த 707 பேரும் விமானப்படையை சேர்ந்த 7 உயரதிகாரிகள் அடங்கலாக 1024 பேரும் பாதுகாப்பு படையில் மீள இணைந்துள்ளனர். சேவையிலிருந்து தப்பிச் சென்றவர்கள், அருகிலுள்ள பாதுகாப்புப் படைதளத்திற்கு சென்று அறிக்கையிடுவதனூடாக சேவையில் மீள இணைந்துகொள்ளுவதற்கு அல்லது உத்தியோகபூர்வமாக சேவையிலிருந்து விலகுவதற்காக பொது மன்னிப்பு கால அறிவிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.