பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

by Staff Writer 12-02-2020 | 7:40 AM
Colombo (News 1st) பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (12) இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்போது , ரஞ்சன் ராமநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குரல் பதிவுகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறினார். கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள குரல் பதிவுகளில் தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதனிடையே, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளுக்கான ஒழுங்குப்பத்திரத்தை தயாரிப்பது தொடர்பில், இன்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது. பாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்