Update: நில அதிர்வு தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என அறிவித்தல்

by Staff Writer 12-02-2020 | 6:58 AM
Colombo (News 1st) Update: இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட நில அதிர்வால் சுனாமி எச்சரிக்கை இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் உறுதியளித்துள்ளது. நில அதிர்வு ஏற்பட்டபோதும், நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தேவையற்ற பதற்றங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கைக்கு தென்கிழக்கு திசையின் இந்து சமுத்திரத்தில் இன்று அதிகாலை 2.34 மணியளவில் 5.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது. ஹம்பாந்தோட்டையிலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவில், கிழக்கு கடற்பிராந்தியந்தில் நில அதிர்வு பதிவாகியதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது​. 10 கிலோமீற்றர் கடல் பாறைக்குள் ஏற்பட்டுள்ள இந் நில அதிர்வால் இலங்கைக்கு எவ்வித சுனாமி எச்சரிக்கைகளும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திருகோணமலை, மாத்தறை மற்றும் அம்பலன்கொட ஆகிய பகுதிகளில் இந் நில அதிர்வு உணரப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ------------------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கைக்கு தென்கிழக்கு திசையின் இந்து சமுத்திரத்தில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (12) அதிகாலை 2.34 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. ஹம்பாந்தோட்டையிலிருந்து 240 கிலோமீற்றர்ருக்கு தொலைவில், தென்கிழக்கு கடற்பிராந்தியந்தில் நில அதிர்வு பதிவாகியதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது​. 5.4 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. 10 கிலோமீற்றர் கடல் பாறைக்குள் ஏற்பட்டுள்ள இந்த நில அதிர்வால் இலங்கைக்கு எவ்வித சுனாமி எச்சரிக்கையும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, மாத்தறை மற்றும் அம்பலன்கொட ஆகிய பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்