குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது அமெரிக்க அணி

குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த அணியாக அமெரிக்கா பதிவானது

by Staff Writer 12-02-2020 | 2:01 PM
Colombo (News 1st) சர்வதேச ஒருநாள் அரங்கில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த அணியாக அமெரிக்கா பதிவாகியுள்ளது. இரண்டாம் தர அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா இந்த மோசமான சாதனையை படைத்துள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா, 35 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் ஸிம்பாப்வே 35 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்திருந்தது. இதுவே இத்தனை வருடங்கள் ஒருநாள் அரங்கில் ஓர் அணி பெற்றுக்கொண்ட குறைவான ஓட்டங்களாக பதிவாகியிருந்தது. போட்டியில் அமெரிக்க அணி 12 ஓவர்கள் மாத்திரம் துடுப்பெடுத்தாடியிருந்தது. 19 வயதான Sandeep Lamichhane 6 விக்கெட்களையும் Sushan Bhari 4 விக்கெட்களையும் வீழ்த்தினர். வெற்றி இலக்கை நேபாள அணி 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு கடந்தது.