புதிய கொரோனா நோய்த் தாக்கத்திற்கு Covid-19 என பெயரிடப்பட்டுள்ளது

புதிய கொரோனா நோய்த் தாக்கத்திற்கு Covid-19 என பெயரிடப்பட்டுள்ளது

புதிய கொரோனா நோய்த் தாக்கத்திற்கு Covid-19 என பெயரிடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2020 | 10:42 am

Colombo (News 1st) புதிய கொரோனா வைரஸினால் ஏற்படும் நோய்த்தாக்கத்திற்கு Covid-19 என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரிட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டி, தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தொட்டுள்ள நிலையிலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக உலகநாடுகள் இயலுமானளவு தீவிரமாக செயற்பட வேண்டுமென உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, இந்த வலியுறுத்தலையும் புதிய பெயர் அறிவிப்பையும் அவர் வௌியிட்டுள்ளார்.

வைரஸ்களுக்கும் நோய்த்தாக்கத்திற்கும் இடையில் ஏற்படக்கூடிய குழப்பங்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு, கொரோனா வைரஸால் ஏற்படும் நோய்த் தாக்கத்திற்கு உத்தியோகபூர்வ பெயரிடுமாறு ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்