தண்ணீர் விழிப்புணர்வு பாடலுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்

தண்ணீர் விழிப்புணர்வு பாடலுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்

தண்ணீர் விழிப்புணர்வு பாடலுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2020 | 3:38 pm

Colombo (News 1st) தண்ணீர் விழிப்புணர்வு குறித்து உலக அளவிலான ஒரு பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தண்ணீர் பாதுகாப்பு தொடர்பில் இடம்பெற்ற கண்காட்சி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டிருந்த போது இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

தண்ணீரின் அவசியம், சேமிப்பு, விழிப்புணர்வு குறித்து சென்னையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியை சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் ஏ.ஆர்.ரஹ்மான் பின்வருமாறு கருத்து வௌியிட்டார்

ஏழையோ, பணக்காரனோ குடிக்கும் தண்ணீர் குழாயில் வர வேண்டும். இப்போது நாம் யோசித்து யோசித்து மினரல் வாட்டர் குடித்துக் கொண்டிருக்கிறோம். தண்ணீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது மனித உரிமை.

அனைவரும் முக்கியத்துவம் அளித்து தண்ணீருக்காக உழைக்க வேண்டும். அப்படிச் செய்தாலே இன்னுமொரு 10 அல்லது 15 ஆண்டுகளில் நல்ல தீர்வு கிடைக்கும்.

தற்போதுள்ள இளம் தலைமுறையினரிடம் தண்ணீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறிவிட்டோம். தண்ணீர் விழிப்புணர்வு குறித்து உலக அளவிலான ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளேன். விரைவில் அது வெளியாகும்

என கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்