மெக்ஸிக்கோவிலிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட ஐஸ் போதைப்பொருள்: ஒருவர் கைது 

மெக்ஸிக்கோவிலிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட ஐஸ் போதைப்பொருள்: ஒருவர் கைது 

மெக்ஸிக்கோவிலிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட ஐஸ் போதைப்பொருள்: ஒருவர் கைது 

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2020 | 9:53 am

 

Colombo (News 1st) மெக்ஸிக்கோவிலிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட 500 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரும் சுங்க அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிப்பிட்டிய – பெலவத்த பகுதியை சேர்ந்த 29 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்களுக்குள் மிக சூட்சுமான முறையில் மறைத்துவைத்து மெக்ஸிக்கோவிலிருந்து ஐஸ் போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்