19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட்டில் பங்களாதேஷ் சம்பியன்

19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட்டில் பங்களாதேஷ் சம்பியன்

19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட்டில் பங்களாதேஷ் சம்பியன்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2020 | 2:24 pm

Colombo (News 1st) 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் முதல்தடவையாக சம்பியனானது.

இலங்கை அணியின் முன்னாள் வீரரான நவீட் நவாஸ் பங்களாதேஷ் இளையோர் அணியின் பிரதான பயிற்றுநராக கடமையாற்றுகிறார்.

இந்த வெற்றி தொடர்பில் அவர் ஸ்போட்ஸ்பெஸ்டுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

தாம் இளையோர் உலகக் கிண்ணத்துக்காக 2018 ஆம் ஆண்டு முதல் தயாராகியதாக நவீட் நவாஸ் தெரிவித்தார்.

முதல் வருடத்தில் வீரர்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு உள்ளிட்டவற்றில் பயிற்சிகளை வழங்கியதாகவும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து இளையோர் அணி பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் செய்ததாகவும் அதன்பின்னர் தாம் இங்கிலாந்துக்கு சென்று முக்கோண தொடரொன்றில் விளையாடியதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அந்தத் தொடர்களில் வீரர்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்தியதாகக் கூறிய அவர், அதனூடாக தாம் வீரர்களின் நம்பிக்கை திறனை அதிகரிக்க செய்ததாக தெரிவித்தார்.

அவர்களது திறமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் 2019 ஆம் ஆண்டில் தாம் 33 போட்டிகளில் விளையாடியதாகவும் அவற்றில் 90 வீதமான போட்டிகளில் வெற்றியீட்டியிதாகவும் கூறினார்.

இலங்கையர்களிடமிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு பாரிய சேவை கிடைத்திருக்கின்றதாகவும் சந்திக்க ஹதுருசிங்க அதுமாத்திரமன்றி சம்பிக்க ராமநாயக்க இன்னும் வேகப்பந்து வீச்சு பயிற்றுநராக செயற்படுவதோடு மரியோ வெல்லவராயன் தொழில்நுட்ப பயிற்றுநராக 6 வருடங்கள் தேசிய அணியில் கடமையாற்றியுள்ளதாகவும் நவீட் கூறினார்.

இலங்கையர்களிடமிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு பாரிய சேவை கிடைத்துள்ளதென தான் நினைப்பதாகவும் பங்களாதேஷ் இளையோர் அணியின் பயிற்றுநர் நவீட் நவாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்