புத்தளத்தில் மரக்கறி விலை அதிகரிப்பு

புத்தளத்தில் மரக்கறி விலை அதிகரிப்பு

by Staff Writer 11-02-2020 | 1:06 PM
Colombo (News 1st) புத்தளம் மாவட்டத்தில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. நிலவும் வறட்சி மற்றும் மலையகத்திலிருந்து கொண்டுவரப்படும் மரக்கறிகளின் தொகை குறைவடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் கரட் 480 ரூபாவாகவும் போஞ்சி 420 ரூபாவாகவும் லீக்ஸ் 400 ரூபாவாகவும் காணப்படுகின்றது. இதனைத்தவிர உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பீற்றூட் 300 ரூபாவாகவும் கோவா 250 ரூபாவாகவும் கத்தரிக்காய் 200 ரூபாவாகவும் புத்தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றது.