மாணவர்களை உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம்

திறந்தவௌியில் மாணவர்களை உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம்: கல்வி அமைச்சு ஆலோசனை

by Staff Writer 11-02-2020 | 6:23 PM
Colombo (News 1st) அதிக வெப்பம் நிலவுவதன் காரணமாக திறந்தவௌியில் மாணவர்களை உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. அனைத்து பாடசாலைகளினதும் தலைமை அதிகாரிகளுக்கு இந்த ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடும் வெப்பம் காரணமாக முற்பகல் 11.00 மணி தொடக்கம் மாலை 3.30 வரையான காலப்பகுதிக்குள் திறந்தவௌியில் மாணவர்களை உடற்பயிற்சி உள்ளிட்ட கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆலோசனைக் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் அடிக்கடி மாணவர்கள் தண்ணீர் அருந்த வேண்டும் எனவும், உடல் சோர்வடையாதவாறு செயற்படுதல் வேண்டும் எனவும் தொற்றா நோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டார். கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வௌியேறினால் தேவையான அளவு சுத்தமான குடிநீரை பருக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.