நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2020 | 3:42 pm

Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் வழமையை விட 2 தொடக்கம் 4 பாகை செல்சியஸிற்கு இடைப்பட்ட அளவில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய வெப்பநிலையாக 35.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை கொழும்பு நகரில் பதிவாகியுள்ளது.

இதன் பிரகாரம் கொழும்பு நகரில் வழமையை விட 4 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காலியிலும் 4 பாகை செல்சியஸ் அதிகரித்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

திருகோணமலை மற்றும் இரத்மலானை பகுதிகளில் வழமையை விட 3 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது.

புத்தளம், கட்டுநாயக்க, ஹம்பந்தோட்டை ஆகிய பகுதிகளில் வழமையை விட 2 பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்