ஜம்பட்டா வீதி கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது

ஜம்பட்டா வீதி கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது

ஜம்பட்டா வீதி கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2020 | 11:05 am

Colombo (News 1st) கொழும்பு – கொச்சிக்கடை, ஜம்பெட்டா வீதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் பேலியகொடையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரவையை செலுத்தக்கூடிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, இரண்டு ரவைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குருணாகல் – ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த 31 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி, கொச்சிக்கடை – ஜம்பெட்டா வீதியில் இரண்டு சந்தேகநபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்