உரிய பஸ் சேவையை வழங்குமாறு மடுல்சீமை பகுதி மாணவர்கள் வலியுறுத்தல்

by Staff Writer 11-02-2020 | 1:25 PM
Colombo (News 1st) பாடசாலை பஸ் சேவையை மீண்டும் வழமைபோல வழங்குமாறு கோரி பதுளை - பசறை, மடுல்சீமையில் இன்று (11) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற பஸ் விபத்தையடுத்து இங்குள்ள மாணவர்களுக்காக வழங்கப்பட்டுவந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பசறை நகரிலிருந்து கொக்காகலை, குருவிகல, எலமான், ராகல, பிட்டமாறுவ, ரோபேரி உள்ளிட்ட பகுதிகளுக்கான உரிய பஸ் சேவைகள் இடம்பெறுவதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குருவிகல சந்தியில் ஒன்றுகூடிய மாணவர்களும் பெற்றோர்களும் பேரணியாக மடுல்சீமை நகரை சென்றடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்