இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2020 | 9:28 pm

Colombo (News 1st) இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பு மாநகர சபைக்கான விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் (Sarah Hulton) மட்டக்களப்பு மாநகர முதல்வரை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் உயர்ஸ்தானிகர் அலுவலக அரசியல் பிரிவிற்கான அதிகாரி ஜோவிதா அருளானந்தம் மற்றும் மனித உரிமைகளுக்கு பொறுப்பான அலுவலர் சுமுது ஜயசிங்க உள்ளிட்ட குழுவினர் இந்த விஜயத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினரை மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் மற்றும் மாநகர சபையின் உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கப்பெறும் ஒதுக்கீடுகள் உள்ளிட்ட மாநகர சபையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்