இந்தியாவிலிருந்து நாடு திரும்பினார் பிரதமர்

இந்தியாவிலிருந்து நாடு திரும்பினார் பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2020 | 4:49 pm

Colombo (News 1st) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று நாடு திரும்பினார்.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த 7 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியா சென்றார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் முன்னெடுக்கப்பட்டது.

விஜயத்தை நிறைவு செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் இன்று பகல் 12.45 அளவில் நாடு திரும்பினார்.

இந்தியாவிற்கு சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டார்.

மேலும், காசி மற்றும் புத்தகயா உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கும் சென்று அவர் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

கடந்த 7 ஆம் திகதி தொடக்கம் இந்திய குடியரசுத்தலைவர், பாரத பிரதமர், அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்