வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணைக்கு இலாபம்

வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணைக்கு இலாபம்

by Staff Writer 10-02-2020 | 7:15 PM
Colombo (News 1st) வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் கடந்த வருடம் 11 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக வவுனியா மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், பண்ணையின் நிகர இலாபமாக 5 மில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 2019ஆம் ஆண்டிலேயே வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணை அதிக இலாபமீட்டியதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.