மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக நெல் கொள்வனவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக நெல் கொள்வனவு

by Chandrasekaram Chandravadani 10-02-2020 | 4:58 PM
Colombo (News 1st) அரசினால் இதுவரை 2,052 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் 1,798 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் ஜடால் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அதிக நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே, பொலன்னறுவை, மாத்தளை, கம்பஹா, கண்டி, பதுளை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் கொள்வனவு நடவடிக்கை இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.