by Staff Writer 10-02-2020 | 7:02 PM
Colombo (News 1st) சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் பொதுச் செயலாளராக தாம் நியமிக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (10) முற்பகல் கூடியது.
இதேவேளை, தாம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ஆகியோர் இன்று சிறிகொத்தவிற்கு சென்றிருந்த போதிலும் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இன்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான செயற்குழுக் கூட்டம் 6.30 வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.