பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன

எழுத்தாளர் Staff Writer

10 Feb, 2020 | 2:36 pm

Colombo (News 1st) அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று (10) தௌிவுபடுத்தியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்தப்பில் இது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

45 வயது வரை அரசின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பின் அல்லது பட்டதாரிக்கு இணையான உயர் டிப்ளோமா இருப்பின் பிரதேச செயலக மட்டத்தில் அரச தொழில் வழங்குவதற்கு இதன்மூலம் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. தலைமைத்துவப் பயிற்சி மற்றும் ஏனைய பயிற்சிகள் வழங்கப்படும் ஓராண்டு காலப்பகுதியில் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அதன்பின்னர் பிரதேசத்திற்குள் காணப்படும் வேலைவாய்ப்புகளுக்கு ஏற்றவாறு, நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. 5 வருடங்களுக்கு இடமாற்றம் பெற முடியாது. இதற்காக விண்ணப்பிப்பதற்கான கால எல்லை எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்