கொரோனாவின் ஆட்டம் தொடர்கிறது – இதுவரை 908 பேர் பலி

கொரோனாவின் ஆட்டம் தொடர்கிறது – இதுவரை 908 பேர் பலி

கொரோனாவின் ஆட்டம் தொடர்கிறது – இதுவரை 908 பேர் பலி

எழுத்தாளர் Fazlullah Mubarak

10 Feb, 2020 | 10:19 am

கொரோனா வைரஸினால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, சார்ஸ் வைரஸ் தாக்கத்தினால் பலியானோரின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் வரையில் கொரோனா வைரிஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 908 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்திற்குள் மாத்திரம் 97 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர்.

வைரஸினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,171 ஆக அதிகரித்துள்ளது.

மனித குலத்தின் எதிரியாக கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளதாக சீனாவுக்கான பிரித்தானியா தூதுவர் BBC செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதனை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சீனாவின் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உள்ளிட்ட பிரதான நிறுவனங்களில் தொழில்புரியும் ஊழியர்கள் பல நாட்களின் பின்னர் இன்று தொழிலுக்கு சமூகமளிக்கவுள்ளனர்.

எனினும் சீனாவின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், சுமார் 20,000 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் ஹூபேய் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்