முச்சக்கரவண்டியொன்று 200 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி

முச்சக்கரவண்டியொன்று 200 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி

முச்சக்கரவண்டியொன்று 200 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் பலி

எழுத்தாளர் Fazlullah Mubarak

10 Feb, 2020 | 12:31 pm

கம்பளை – புப்புரஸ்ஸ ஐந்துரோட்டு சந்தியில் முச்சக்கரவண்டியொன்று சுமார் 200 அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் பன்விலதென்ன வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புப்புரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மரணசடங்கிற்கு சென்று மீண்டும் பன்விலதென்ன திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பன்விலதென்ன வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புப்புரஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, யாழ். சாவகச்சேரி அரசடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கார் ஒன்றுடன் மோட்டார்சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மோட்டார்சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மேலுமொருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்