ஐரோப்பாவின் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது

ஐரோப்பாவின் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது

ஐரோப்பாவின் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Feb, 2020 | 3:09 pm

Colombo (News 1st) சூரியனுக்கு மிகவும் அருகில் சென்று ஆய்வு நடத்தக்கூடிய ஐரோப்பாவின் செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனவெரல் தளத்திலிருந்து GMT நேரப்படி 04:03 மணிக்கு இது விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்தத் திட்டமானது 1.5 பில்லியன் யூரோ பெறுமதியானதென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்மதியில் கெமராக்கள், சென்ஸர்கள் உட்பட பல்வேறு உயர்தொழில்நுட்ப சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இவற்றினைக் கொண்டு சூரியனின் இயக்கத்திலுள்ள மிகவும் நுண்மையான விடயங்கள் கண்டறியப்படவுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்