ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுக்கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டம் இன்று

by Fazlullah Mubarak 10-02-2020 | 10:17 AM

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டம் இன்று (10) நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாலை 4 மணிக்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளது. இதனைத்தவிர, கடந்த செயற்குழுக் கூட்டத்தில் உறுப்புரிமைகள் இரத்து செய்யப்பட்ட உறுப்பினர்கள் சிலர் மீண்டும் குழுவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கடந்த 30 ஆம் திகதி இறுதியாக கூடியது. கடந்த 6 ஆம் திகதி குழு கூடவிருந்த போதிலும் பின்னர் கூட்டம் இரத்து செய்யப்பட்டது.