இலங்கையுடனான தொடர்; மேற்கிந்தியத்தீவுகள் அணி நாட்டை வந்தடைந்தது

இலங்கையுடனான தொடர்; மேற்கிந்தியத்தீவுகள் அணி நாட்டை வந்தடைந்தது

இலங்கையுடனான தொடர்; மேற்கிந்தியத்தீவுகள் அணி நாட்டை வந்தடைந்தது

எழுத்தாளர் Staff Writer

10 Feb, 2020 | 8:00 pm

Colombo (News 1st) இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்தியத்தீவுகள் குழாம் இன்று (10) அதிகாலை நாட்டுக்கு வருகை தந்துள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 2 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளன.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இலங்கையும் மேற்கிந்தியத்தீவுகளும் இதுவரையில் 57 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன.

அதில் மேற்கிந்தியத்தீவுகள் 28 போட்டிகளிலும் இலங்கை 26 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன.

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் இவின் லுவிஸ் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மியர் ஆகியோருக்கு இலங்கைக்கு எதிரான தொடரில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

அவர்கள் உடற்தகுதியை நிரூபிக்க தவறியிருந்தமையே அதற்கான காரணமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்